“இஸ்ரேலின் ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைகள் தீர்ந்துவிட்டன.. கடைசி 10 மாத்திரமே எஞ்சியுள்ளன.. ஈரானின் ஏவுகணை தாக்குதல்கள் தொடர்கின்றன .. போர் தலைகீழாக மாறுகிறது…”

இஸ்ரேலின் ஏவுகணை எதிர்ப்புத் தொகுதிகளில் தட்டுப்பாடு: அமெரிக்கா தகவல்
ஈரானுடனான மோதல் வலுவடைந்து வரும் பின்னணியில், இஸ்ரேலிடம் உள்ள பலிஸ்டிக் ஏவுகணை எதிர்ப்புத் தொகுதிகளில் பயன்படுத்தப்படும் மறிப்பு ஏவுகணைகளின் (Interceptors) கையிருப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக அமெரிக்க அறிக்கைகளை மேற்கோள் காட்டி Semafor செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிகாரிகளின் கூற்றுப்படி, இஸ்ரேல் இந்த வாரம் இது குறித்து ஐக்கிய அமெரிக்காவிற்குத் தெளிவுபடுத்தியுள்ளது.
இஸ்ரேலின் ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைகளின் கையிருப்பு மிகவும் குறைந்த மட்டத்தை எட்டியுள்ளதாகவும், சில வேளைகளில் கையிருப்பில் 10-க்கும் குறைவான ஏவுகணைகளே எஞ்சியிருக்கலாம் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலைமை ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்று எனத் தெரிவித்துள்ள அமெரிக்க அதிகாரிகள், பிராந்தியத்தில் உள்ள தமது பணியாளர்கள் மற்றும் நிலையங்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான அளவு ஆயுதக் கையிருப்பு அமெரிக்காவிடம் உள்ளதாக உறுதி அளித்துள்ளனர்.
இந்தத் தட்டுப்பாட்டுக்குத் தீர்வுகாண இஸ்ரேல் மாற்று வழிமுறைகள் குறித்து அவதானம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, மத்திய கிழக்கின் பாதுகாப்பிற்காக ட்ரோன் எதிர்ப்புத் தொகுதிகளை (Anti-drone systems) அனுப்புவது குறித்து பிரித்தானிய அரசாங்கமும் அவதானம் செலுத்தி வருகின்றது.



