சாய்ந்தமருது பிரதேச உணவகங்களில் திடீர் பரிசோதனை : பாவனைக்கு உதவாத உணவுகள் கைப்பற்றப்பட்டு அழிப்பு !
நூருல் ஹுதா உமர்
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் திருமதி சகிலா இஸ்ஸதீன் அவர்களின் வழிகாட்டலில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே .மதன் அவர்களின் தலைமையிலான குழுவினர் சாய்ந்தமருது பிரதேச உணவகங்களில் திடீர் பரிசீலனை செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கமைய சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட உணவகங்களில் திடீர் பரிசீலனை செய்யப்பட்டது இதில் உணவகங்கள், வெதுப்பகங்கள், மரக்கறி, மீன் விற்பனை நிலையங்கள், பலசரக்கு கடைகள், ஸ்வீட்ஸ் கடைகள் என்பன பரிசீலிக்கப்பட்டது.
இதன் போது பழுதடைந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டதுடன் சில நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் எதிர்வரும் காலங்களில் உணவு சுகாதாரம் மீதான எமது கண்காணிப்பு தொடரும் என்பதுடன் இறுக்கமான சட்ட நடைமுறைகளும் மேற்கொள்ளப்படும்.
இந்த நடவடிக்கைகளில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
UMAR LEBBE NOORUL HUTHA UMAR