News
குரங்குகளுக்கு சிறைச்சாலை ! யோசனை முன்வைக்கப்பட்டது.

நாட்டில் விவசாய நிலங்களுக்கு குரங்குகளால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலுக்கு தீர்வாக குரங்குகளுக்கு சிறைச்சாலை அமைக்குமாறு தன்னிடம் யோசனை முன்வைக்கப்பட்டதாக என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
தன்னை சந்திக்க வந்த ஒருவர் இந்த யோசனையை முன்வைத்ததாக அவர் கூறினார்.
வனப்பகுதியில் 50 ஏக்கரில் இடன் ஒன்றை தெரிவு செய்து அதனை ஆண் பெண் குரங்குகளுக்கு என இரண்டாக பிரித்து வலை மூலம் முற்றாக அதனை மறைத்து அங்கே ஆண் பெண் குரங்குகளை தனித்தனியே அடைத்து வைக்குமாறு ஒருவர் யோசனை முன்வைத்ததாக குறிப்பிட்ட அமைச்சர்.
இது போல நாட்டில் உள்ள சில பிரதேசங்களில் குரங்களுக்கு சிறைகள் அமைக்குமாறு ஒருவர் யோசனை முன்வைத்ததாக அவர் கூறினார்.

