News

மாவடிப்பள்ளி அனர்த்ததினால்   உயிரிழந்த மதரஸா மாணவர்களின் குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் இரண்டரை இலட்ச ரூபா நஷ்டஈடு வழங்கி வைப்பு

பாறுக் ஷிஹான்

அண்மையில் காரைதீவு மாவடிப்பள்ளி பாலத்திற்கருகில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவத்தில்  உயிரிழந்த சம்மாந்துறையைச் சேர்ந்த ஆறு மதரஸா மாணவர்கள் மற்றும் பொதுமகன் ஒருவருமாக  எழு குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் ரூபாய் 250,000 நஸ்டஈடாக  வழங்கி வைக்கும் நிகழ்வும், அவர்களுக்காக துஆ பிராத்தனை செய்யும் நிகழ்வும்,   சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.


சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினரும்,பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான ஏ ஆதம்பாவா கலந்து கொண்டு கசோலைகளை வழங்கி வைத்தார்.

மேலும் இந் நிகழ்வில் கெளரவ அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும் இந் நிகழ்வுக்கு அம்பாறை மாவட்ட செயலக பிரதம கணக்காளர் ஏ.எல் மஹ்ரூப்,சம்மாந்துறை உதவி பிரதேச செயலாளர் யூ.எம் அஸ்லம்(LLB),கணக்காளர் எஸ்.எல் சர்தார் மிர்ஸா,சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபைத் தலைவரும்,முன்னாள் அரசாஙக அதிபருமான ஐ.எம் ஹனீபா,நிர்வாக உத்தியோகத்தர் ஜே.எம் ஜெமீல்,சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.பி.எம் ஹுஸைன் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா அவர்களின் பிரதிநிதியான எம்.இம்தியாஸ், சம்மாந்துறை உலமா சபைத் தலைவர்  மெளலவி எம்.எல்.மரணித்தவர்களுசம்மாந்துறை பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.எம் நெளபர்,அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர் எம்.எஸ்.எம் அஸாருத்தீன்  உட்பட கிராம சேவகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அத்துடன் இவ் நஸ்டஈடுத் தொகையினை ஒரு மில்லியனாக அதிகரித்து வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் இவ் நிகழ்வின் போது தெரிவித்திருந்தார்.

இந் நிகழ்வில் மெளலவி அல்ஹாபிழ் ஏ.பெளஸ்தீன்(தப்லீகி) அவர்களினால் மரணித்தவர்களுக்காக துஆப் பிரத்தனை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.



Thanks & Best Regards,

பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)
Journalist-මාධ්‍යවේදී

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button