News

கொழும்பு பிரதேசத்தில் பொலிஸார் நடத்திய சுற்றி வளைப்பில், போதைப் பொருட்கள், பணம் எண்ணும் இயந்திரம் மற்றும் ஏராளமான பணத்துடன் மூன்று இளம் வயதினர் கைது 

வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொலிங்வுட் பிளேஸ் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு (டிசம்பர் 13) வாலான ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த நடவடிக்கையில் 36 கிராம் கொக்கைன், 203 கிராம் குஷ் போதைப் பொருள், மற்றும்
  போதைப் பொருள் வர்த்தகம் மூலம் பெறப்பட்ட   1,875,000 ரூபா பணம், ஒரு மொபைல் போன்,  பணம் எண்ணும் இயந்திரம், இரண்டு வங்கி அட்டைகள் மற்றும் ஒரு மின்னணு தராசு என்பன கண்டுபிடிக்க பட்டன.

தெஹிவளையைச் சேர்ந்த 26 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் இருந்து பெறப்பட்ட கூடுதல் தகவலின் பேரில், அதே பகுதியில் 3.6 கிராம் குஷ் போதைப்பொருளுடன் மேலும் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் 24 மற்றும் 25 வயதுடைய மட்டக்குளி மற்றும் கொழும்பு 14 ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள். மூவரும் வெள்ளவத்தை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button