News

சீனாவின் அன்பளிப்பிற்கு தாய்வானுக்கு நன்றி சொன்ன பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய..

சீன மக்கள் குடியரசின் (PRC) அரசாங்கத்தினால் இலங்கை பாடசாலை மாணவர்களுக்கான சீறுடை துணி கையளிக்கும் நிகழ்வு கடந்த வாரம் துறைமுகத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வுக்கு 1 மணிநேரம் கால தாமதமாக வந்துள்ள பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய நிகழ்வில் உரையாற்றிய போது ,(PRC) சீன மக்கள் குடியசின் அதாவது சீனாவின் பரம எதிரியான’ (ROC) “சீனா குடியரசு” அதாவது தாய்வானுக்கு நன்றி தெரிவித்து அதிர்ச்சியளித்துள்ளார்.

(PRC சீன மக்கள் குடியரசு ROC சீன குடியரசுடன் போரின் விளிம்பில் உள்ள அதேவேளை இலங்கை ROC உடன் இராஜதந்திர உறவுகளை கொண்டிருக்கவில்லை என்பதோடு பிரிந்த அரசை அங்கீகரிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.)

இந்த விடயம் இராஜதந்திர மட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக சண்டே டைம்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

Recent Articles

Back to top button