News
எமது அரசாங்கத்தில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்படும்
தமது அரசாங்கத்தில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக குறிப்பிட்டார்.
ஜப்பானில் இலங்கையர்களை சந்தித்து பேசிய அவர் இதனை குறிப்பிட்டார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அடி முதல் நுனி வரை கண்டறிய தமது அரசாங்கத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய அவர்,
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் சில விடயங்கள் தொடர்பில் விசாரணை நடத்தினால் பின்னால் உள்ள மர்மம் வெளியே வரும் என குறிப்பிட்டார்.