News
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புரிந்த ஊழல் மோசடிகள் தொடர்பான தகவல்கள் அடங்கிய இரண்டு கோப்புகள் என்னிடம் உள்ளது ; அனுர
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) செய்ததாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விடயத்தினை தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
அதாவது ரணில் விக்ரமசிங்க புரிந்த ஊழல் மோசடிகள் தொடர்பான தகவல்கள் அடங்கிய இரண்டு கோப்புகள் தம்மிடம் உள்ளதாக அனுரகுமார குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பானுக்கு (Japan) விஜயம் செய்துள்ள அவர், நேற்று (21) அங்குள்ள இலங்கையர்கள் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பில் கலந்துகொண்ட போது இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை தமது அரசாங்கத்தின் கீழ் குறித்த ஊழல்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.