News

சுற்றுலாத்துறைக்கு மிகப்பெரிய கெசினோ சந்தை தேவை…- சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர்

இந்தியாவின் பாரிய கசினோ சுற்றுலா சந்தைக்கு நிகரான சுற்றுலா திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் சமிந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

வியட்நாம், கம்போடியா போன்ற நாடுகள் அந்த சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

இந்த நாட்டு பிரஜைகள் சில விதிமுறைகளை விதித்து சுற்றுலாப்பயணிகளுக்கு இவ்வாறான சந்தர்ப்பங்களை உருவாக்க வேண்டும் எனவும், இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் சுற்றுலாத்துறை மூலம் பணம் சம்பாதிக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தொலைக்காட்சி அலைவரிசையொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Recent Articles

Back to top button