இலங்கை
புதிதாக வாங்கிய ரைஸ் குக்கரில் சோறு சமைக்க முயற்சித்த போது மின்சாரம் தாக்குள்ளாகி இளம் தாய் மரணம் #புத்தளம், மன்னார் வீதி
புத்தளம், மன்னார் வீதி
புத்தளம், மன்னார் வீதி, வேப்பமடு, விழுக்கை எனும் பகுதியில் வசித்து வந்த இரு பிள்ளைகளின் இளம் தாய் ஒருவர் மின்சார தாக்குதலுக்குள்ளாகி பலியானார்.
பாபு துஷ்யந்தி (வயது 28) என்பவரே மின்சார தாக்குதலுக்குள்ளாகி புதன்கிழமை (10) அதிகாலை பலியாகியுள்ளார்.
இப்பெண்மனி (09) செவ்வாய்க்கிழமை இரவு புதிதாக வாங்கிய ரைஸ் குக்கரில் சோறு சமைக்க முயற்சித்த போது மின்சாரம் தாக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
புத்தளம் தள வைத்தியசாலையில் புதன்கிழமை (10) காலை புத்தளம் மற்றும் கல்பிட்டி பிரதேசத்துக்கான திடீர் மரண விசாரணை அதிகாரி பீ.எம். ஹிசாம் முன்னிலையில் பிரேத பரிசோதனை மற்றும் விசாரணைகள் இடம்பெற்றதன் பின்னர் மரண விசாரணை அதிகாரி பீ.எம். ஹிசாம் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்தார்.
எம்.யூ.எம்.சனூன்