News
நாம் ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க தயாராகி வருவதாக எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்றன… நான் ஜனாதிபதித் தேர்தலைக் கண்டிப்பாக நடத்துவேன் ; ரணில்
ஜனாதிபதித் தேர்தலுக்கு பாதீட்டில் பணம் ஒதுக்கப்பட்டதால், ஜனாதிபதித் தேர்தல் கண்டிப்பாக நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தை நடத்துவதற்கு ஆதரவளித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க தாம் தயாராகி வருவதாக எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்ற போதிலும், ஜனாதிபதித் தேர்தலைக் கண்டிப்பாக நடத்துவேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்