News
குரங்குகளுக்கு எது வேண்டுமானாலும் செய்யவும்..குரங்குகள் பாதுகாக்கப்பட்ட மிருகமல்ல..

குரங்குளால் ஏற்படும் சேதத்திலிருந்து பயிர்களைப் பாதுகாப்பதற்கு விவசாயிக்கு எந்தவிதமான தடைகளும் ஏற்படாது என்றும் வனஜீவி திணைகளம் உறுதியளித்துள்ளதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன குறிப்பிட்டார்.
பொல்பித்திகம பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இந்நாட்டின் முக்கிய ஏற்றுமதி பயிராக இருந்த தென்னந்தோப்புக்கு குரங்குளால் ஏற்பட்ட சேதம் கொஞ்ச நஞ்சமல்ல.
கால்நடைகளால் ஏற்படும் சேதத்திலிருந்து பயிரை காக்க விவசாயிக்கு எந்தத் தடையும் இல்லை என்றும் இங்கு உறுதியளித்தார்.
ஏனெனில் குரங்கு வனவிலங்குகளுக்கு சொந்தமான பாதுகாக்கப்பட்ட விலங்கு அல்ல என்பதை அவர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள் என அவர் குறிப்பிட்டார்.



