News
முட்டை விலை குறைந்துள்ளதால் மாத்திரம் பேக்கரி பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது..

முட்டை விலை குறைந்துள்ளதால் மாத்திரம் பேக்கரி பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது என பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கே என் ஜயவர்தன குறிப்பிட்டார்.
60 ரூபாய் வரை முட்டை விலை உயர்ந்த நிலையில் தற்போது 25 ரூபாய் வரை குறைந்துள்ள போதும் அதனால் மாத்திரம் பேக்கரி பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது என பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கே என் ஜயவர்தன குறிப்பிட்டார்.
கேஸ் , மா , மற்றும் மாஜரின் ஆகியவற்றின் விலைகளை குறைக்க்கட்டால் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் குறைக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.



