News

(வீடியோ)  CH & FC கிளப்பில் கடும் தகாத வார்த்தைப் பிரயோகம் செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்னான்டோ

முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அண்மையில் கொழும்பில் உள்ள CH & FC கிளப்பில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

சம்பவ இடத்திலிருந்து வெளியேறும் ஹரின் கத்திக் கூச்சலிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சம்பவ இடத்திலிருந்தவர்கள் தெரிவித்தனர். அவரது குறித்த செயற்பாட்டால் கிளப்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு எதுவும் செய்யப்படவில்லை என கறுவாத்தோட்டப் பொலிஸார் தெரிவித்தனர்.

சமூக ஊடக தரங்களுக்கு இணங்குவதற்காக வீடியோவிலுள்ள அனைத்து தகாத வார்த்தைப் பிரயோகங்களும் அகற்றப்பட்டுள்ளன

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button