ஊடகங்களுக்கு தடைகளை விதிக்கும் எண்ணம் எமது அரசாங்கத்திற்கு இல்லை
ஊடகங்களுக்கு தடைகளை விதிக்கும் எண்ணம் புதிய அரசாங்கத்திற்கு இல்லை என்றும், மக்களுக்காக ஊடகங்களை முறையாக நிர்வகிக்கும் பொறுப்பை அரசாங்கம் நிறைவேற்றுவதாகவும் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இலங்கை ஒலிபரப்பாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் குழுவுடன் ஊடக அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கை ஒலிபரப்பாளர்கள் சங்கத்தின் யோசனைகள் மற்றும் ஆலோசனைகளை அமைச்சரிடம் முன்வைத்து பல கோரிக்கைகளை கலந்துரையாடும் நோக்கில் ஒலிபரப்பாளர்களின் ஒன்றியம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
அங்கு, சங்கத்தை பாதிக்கும் வகையில் தற்போது வரைவு செய்யப்பட்ட சட்டம் மற்றும் தற்போதுள்ள சட்டங்களில் உள்ள சில குறைபாடுகள் குறித்து அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டதுடன், சங்கத்தின் பிரதிநிதிகளை பாதிக்கும் பொதுவான சில விடயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது