News
2024 ஆம் ஆண்டே இலங்கை வரலாற்றில் அதிகளவானோர் வேலைக்காக வெளிநாடுகளுக்குச் சென்ற ஆண்டாக பதிவாகி உள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவிப்பு

இலங்கை வரலாற்றில் 2024ஆம் ஆண்டே அதிகளவானோர் வேலைக்காக வெளிநாடுகளுக்குச் சென்ற ஆண்டாக பதிவாகி உள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
இவ்வருடத்தில் 312,836 பேர் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.
185,162 ஆண் தொழிலாளர்களும் 127,674 பெண் தொழிலாளர்களும் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் 2022ஆம் ஆண்டு அதிகளவானோர் வெளிநாடுகளுக்குச் சென்றதாகவும், கடந்த 6 வருடங்களில் 13 இலட்சம் இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளனர்.



