நீதிமன்றத்தின் வழக்குப் பொருட்கள் அறையில் இருந்த பெறுமதியான பொருள் ஒன்றை திருடி காதலனுக்கு பரிசளித்த பெண் அதிகாரி கைது #இலங்கை

நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தின் வழக்குப் பொருட்கள் அறையில் பெறுமதியான தொலைபேசி காணாமல் போனமை தொடர்பில் நுவரெலியா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம், தொலைபேசியை திருடிய நீதிமன்றத்தில் பணிபுரியும் அதிகாரி கைது செய்யப்பட்டு நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். உத்தரவிட்டார்.
நுவரெலியா நீதவான் நீதிமன்றில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந்த பெறுமதியான கையடக்கத் தொலைபேசியை சந்தேகநபர் நீதிமன்ற உத்தியோகத்தர் திருடி தனது காதலனுக்கு பரிசாக வழங்கியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
வழக்கு அறையில் பெறுமதியான தொலைபேசி ஒன்று தவறியமை தொடர்பில் நுவரெலியா நீதவான் நீதிமன்ற பதிவாளரிடம் கடந்த (22) நுவரெலியா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் நுவரெலியா தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரேமலால் ஹெட்டியாராச்சியின் பணிப்புரைக்கமைய உப பொலிஸ் பரிசோதகர். பிரியதர்ஷன மற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ரசிக (75607) ஆகியோர் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் காணாமல் போன தொலைபேசியை பயன்படுத்திய நபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். விசாரணைகளின் போது நீதிமன்றத்தின் வழக்கு களஞ்சியசாலையில் பணிபுரிந்த காதலி, குறித்த தொலைபேசியை காதலனுக்கு பரிசாக வழங்கியுள்ளார்.



