News
பிள்ளையான் குரூப் என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது ; சாணக்கியன்
தமக்கு உயிராபத்து இருப்பதாக வெளியான செய்தி ஒன்று தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் நாடாளுமன்றில் இன்று (23) சுட்டிக்காட்டினார்.
இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தரப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச புலனாய்வுப் பிரிவு ஒன்றின் மூலம் தகவல் கிடைத்திருப்பதாக இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து இன்றையதினம் நாடாளுமன்றில் பிரஸ்தாபித்த சாணக்கியன், இந்தச் செய்தி தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, காவல்துறைமா அதிபருக்குத் தாம் கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.
எனினும் இது தொடர்பாக இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் உடனடி கருத்து கிடைக்கப் பெறவில்லை.