News

புத்தாண்டு கொண்டாட்டத்தில் குடித்த பானம் பிடிக்கவில்லை – 19 வயது இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு #இலங்கை

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அருந்திய பானத்தால் ஒவ்வாமை ஏற்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக கெஸ்பேவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கஹதுடுவ பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

குறித்த இளைஞர் நேற்று (31) நண்பர்களுடன் பட்டாசுகளை வெடித்து புத்தாண்டைக் கொண்டாடியுள்ளார்.

அப்போது, இரு இளைஞர்கள் அருந்திய பானத்தால் ஒவ்வாமை ஏற்பட்டது.

குறித்த இருவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் ஒருவர் இன்றையதினம் (01) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button