News

குளவி தாக்குதலுக்கு உள்ளான பெண்ணொருவர் வைத்தியசாலைக்குள் ஓடியதை அடுத்து அவரை விரட்டி வந்த குளவிகள் அங்கிருந்த மேலும் 11 பேர் மீதும்  தாக்கியதில் அனைவரும் பெரிய வைத்தியசாலை ஒன்றில் அனுமதி

குளவி தாக்குதலுக்கு உள்ளான பெண்ணொருவர் கம்பளை அட்டாபாவில் உள்ள உடகம கிராமிய வைத்தியசாலைக்கு அலறியடித்து ஓடியதையடுத்து அவரை விரட்டி வந்த குளவிகள் அங்கிருந்த 11 பேர் மீதும்  தாக்கியதில் அவர்கள் கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



மருத்துவமனை ஊழியர்கள் நால்வர் மீதும், மருத்துவ மனைக்கு வந்திருந்த எட்டு பெண்கள் மீதும், மருத்துவ மனையை நடத்திய மருத்துவர் மீதும் குளவிகள் தாக்கியுள்ளன.



அட்டபாவின் கலவெல்கொல்ல பிரதேசத்தில் மரத்தில் கட்டப்பட்டிருந்த குளவி கூட்டை பருந்து தாக்கியதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.



அவ்விடத்திலிருந்து பயணித்த பெண் ஒருவரை இந்த குளவி கொட்டியதால் குளவி கொட்டியதில் இருந்து தப்பிக்க அலறியடித்து வைத்தியசாலைக்கு ஓடியுள்ளார்.



அப்போது மருத்துவமனையில் சிகிச்சை மற்றும் மருந்து வழங்கும் செயற்பாடு இடம்பெற்றுக்  கொண்டிருந்ததால், அதிகமானோர் அங்கு கூடியிருந்தனர்.

இந்த பெண் கூச்சலிட்டபடி அந்த கும்பலிடம் சென்றபோது, அவரை பின்தொடர்ந்து வந்த குளவிகள் அனைவரையும் தாக்கின.



இக்குழுவினர் வைத்தியசாலையின் ஜன்னல் கதவுகளை மூடி தீ பந்தங்களை வீசி தப்பிச் செல்ல முற்பட்டதுடன் இரண்டு அம்பியூலன்ஸ்கள் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டவர்கள் கம்பளை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.



வைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள கடைகளின் ஊழியர்களுக்கும் குளவிகள் அச்சுறுத்தல் ஏற்பட்டதால் அவர்களும் கடைகளை அடைத்து தீ மூட்டி தப்பிச் செல்ல முற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button