News
திஹாரி அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் வணிகக் கழகம் சர்வதேச ஆசிய சாதனையாளர்களிடமிருந்து 2025 ஆம் ஆண்டுக்கான தொழில்முனைவோர் மாணவர் சங்க விருதை வென்றது.

திஹாரியில் அமைந்திருக்கும் Wp/Gm அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் வணிக கழகத்தின் கீழ் செயலாற்றும் முயற்சியாண்மை கழகத்திற்கு (Entrepreneurship Club) Asian Achievers Award 2025 விருது கிடைத்துள்ளது. 2024ஆம் ஆண்டில் முயற்சியாண்மை கழகத்தின் மூலம் மாணவர்கள் மேற்கொண்ட பல சிறப்பான செயற்திட்டங்களை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் திகதி இந்த விருதளிப்பு விழா BMICH இல் நடைபெற்றது. கல்லூரியின் கழக உறுப்பினர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
Yours sincerely,
Nihraj Marikkar
Secretary, Commerce Club
WP/Gm Al Azhar Central College



