News

அமெரிக்கா கடும் தாக்குதல் நடத்தியதாக கூறிய நிலையில், கார்க் தீவில் இருந்து எண்ணெய் ஏற்றுமதி தடையின்றி வழமைபோல் தொடர்வதாக ஈரான் அறிவிப்பு

கார்க் தீவின் எண்ணெய் ஏற்றுமதி தடையின்றி தொடர்வதாக ஈரான் அதிகாரி தெரிவிப்பு

கார்க் (Kharg) தீவின் ஏற்றுமதி நடவடிக்கைகள் “முழுமையாக நடைபெற்று வருவதாகவும்”, அங்குள்ள எண்ணெய் நிறுவனங்களின் பணிகள் எவ்வித தடையுமின்றி தொடர்வதாகவும் ஈரான் அதிகாரி ஒருவர் அந்நாட்டு செய்தி நிறுவனங்களிடம் தெரிவித்துள்ளார்.

IRNA மற்றும் Tasnim செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை, அந்தத் தீவிலுள்ள இராணுவ இலக்குகள் மீது குண்டுவீச்சு நடத்தியதாக அமெரிக்கா அறிவித்ததைத் தொடர்ந்து வந்துள்ளது. ஈரான் தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) மறிக்க முயன்றால், அப்பகுதியிலுள்ள முக்கிய எண்ணெய் கட்டமைப்புகள் அடுத்த இலக்காக இருக்கும் என்றும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.

ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவை கார்க் தீவு வழியாகவே மேற்கொள்ளப்படுகின்றன.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button