கந்தளாய் பொலிஸ் பிரிவில் பணம் மற்றும் பல இலட்சம் பெறுமதியான தங்க நகைகளை திருடிய, கொள்ளை
கோஷ்டி கைது

கந்தளாய் யூசுப்
கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 91 ம் மைக்கல் சந்தியில், உள்ள வீடொன்றில், கடந்த வாரம் இரவு இடம்பெற்ற கொள்ளை சம்பவத்துடன் சம்பந்தப்பட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் கடந்த நான்காம் திகதி
நான்கு பேர் கொண்ட குழுவினர் அதிகாலை 1-30 மணியளவில் குறித்த, வீட்டிற்குள் புகுந்து கணவனை சராமாரியாக தாக்கி விட்டு, மனைவியை கட்டிப்போட்டு, அலுமாரியில் இருந்த பணம் மற்றும் 34 பவுண் தங்க நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
இந்தக் கொள்ளை கோஷ்டியை, தேடி பிடிப்பதற்கு கந்தளாய் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸ்ஸ விதானகே வழிகாட்டலின் கீழ், பெஸ்பொலிஸ் குழு ஒன்று களம் இறக்கப்பட்டது.
இந்த நிலையில், குறித்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபற்றோர் நான்கு பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். .
கைது செய்யப்பட்டவர்கள் சம்பூர் மற்றும் கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்த 34, 36, 39, 49 வயதுடையவர்கள் எனவும் பொலிசார் தெரிவிக்கின்றனர் .
சந்தேக நபர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, கம்பளை நகரில் உள்ள தங்கக் கடை ஒன்றில் 16 பவுண்கள் உருக்கி, உருகுவதற்கு தயார் செய்யப்பட்டிருந்த மோதிரம் உட்பட 19 பவுண்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணை கந்தளாய் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

