News
ஒரே ஆண்டில் 7000 இற்கும் அதிக இலங்கையர்கள் தங்கள் கண்களை தானம் செய்தனர்
நாடளாவிய ரீதியில் கடந்த ஆண்டில் மாத்திரம் 7,144 பேர் கண்தானம் செய்துள்ளதாக இலங்கை கண்தான சங்கம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் கடந்த ஆண்டில், பார்வை குறைபாடுள்ள 3,163 வெளிநாட்டவர்களுக்கும் 1,475 உள்நாட்டவர்களுக்கும் தங்களால் கண்களை தானம் செய்ய முடிந்ததாக அந்த சங்கத்தின் தலைவர் சம்பத் டி சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாடளாவிய ரீதியில் இதுவரையான காலப்பகுதியில் 22 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தமது இறப்பிற்குப் பின்னர் கண்களை தானம் செய்வதற்குப் பதிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.