கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தின் கீழ் வடிகான்களை துப்பரவு செய்ய களத்தில் இறங்கிய ஓய்வு நிலை நீதிபதி தலைமையிலான சிவில் சமூகக் குழு
(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
அம்பாறை மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் அடைமழை காரணமாக மருதமுனை மசூர் மௌலானா வீதியின் பிரதான வடிகான் அடைபட்டுள்ளதால், வெள்ள நீர் பாய்ந்தோடுவதில் பல்வேறு தடைகள் ஏற்பட்டுள்ளன. இதனால் குறித்த பகுதியில் வாழும் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்கி இருந்தனர்.
இந்நிலையில் இதனை அறிந்த கொண்ட அன்னையில் ஓய்வு பெற்ற யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தின் நீதிபதி ரி.எல். அப்துல் மனாப் தலைமையிலான குழுவினர் உடனடியாக செயல்பட்டு கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தின் கீழ் குறித்த வீதியில் வசிக்கும் பொதுமக்களின் உதவியோடு வடிகான்களின் மூடிகள் அகற்றப்பட்டு நீர் வழிந்தோடுவதற்கான தடைகள் தேடி அகற்றப்பட்டன. நீண்ட காலமாக துப்புரவு செய்யப்படாமல் அடைபட்டுக் கிடந்த கழிவுநீரையும் சிரமதானத்தில் ஈடுபட்ட குழுவினர் (14) துப்புரவு செய்தனர்.
சமூகத்திற்கு முன்மாதிரியாக செயல்பட்ட இந்த குழுவினருக்கு பலரும் தமது பாராட்டுக்களை தெரிவித்தனர்.
—
Thanks & Best Regards,
A.L.M.Sinas (Journalist)
B.A (