News

மன்னார் நீதிமன்றம் முன்பாக இன்று காலை பெண்ணொருவர் உள்ளிட்ட நால்வர் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டதில் இருவர் உயிரிழப்பு

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக இன்று முற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர் என மன்னார் வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மன்னார் நீதிமன்றம் முன்பாக பெண்ணொருவர் உள்ளிட்ட நால்வர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் மன்னர் உயிலங்குளம் பகுதியில் இடம்பெற்ற மாட்டு வண்டி சவாரியின் போது ஏற்பட்ட தர்க்கத்தை தொடர்ந்து ஜூன் மாதம் 10ஆம் திகதி சகோதரர்கள் இருவரை மற்றைய தரப்பினர் படுகொலை செய்திருந்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் மன்னார் நீதிமன்றில் நடைபெற்று வரும் நிலையில், வழக்கு விசாரணைக்காக இன்றைய தினம் வியாழக்கிழமை வருகை தந்தவர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நீதிமன்ற முன்றலில் அவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.

குறித்த சம்பவத்தால் நீதிமன்ற சூழலில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ள நிலையில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button