பெரும்பான்மை உறுப்பினர்கள் ரனிலுக்கு ஆதரவு ; மஹிந்தவிடம் மொட்டு உறுப்பினர்கள் தெரிவிப்பு
ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் உட்பட 30 பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (25) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அறிவித்துள்ளனர்.
கோட்டே நாடாளுமன்ற வளாகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.தற்போது, கட்சியின் பெரும்பான்மையானவர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாகவும், எனவே கட்சியினால் வேறு ஒரு வேட்பாளரை முன்வைத்தால் அது கட்சியின் வாக்காளர் தளத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் எனவும் முன்னாள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே கட்சியில் இருந்து வேறு ஒரு வேட்பாளரை முன்வைக்க வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.