News
டிரம்பை விட தோழர் அனுர குமார அதிகமான வேலைகளை செய்துள்ளார்..-பிமல்
டிரம்பை விட அதிகமாக தோழர் அனுர குமார வேலை செய்துள்ளார் என சபைத்தலைவர் அமைச்சர் பிமல் ரத்னாயக குறிப்பிட்டார்.
கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொலர் ட்ரம்ப் வெற்றிபெற்றதாகவும், அவர் பதவியேற்க சிறிது காலம் எடுத்ததாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அந்த காலப்பகுதிக்குள்,அரசாங்கம் பொறிமுறைக்கு தேவையான அனைத்து அதிகாரிகளையும் நியமித்தது மற்றும் 75 நாட்களுக்குள் அதிகார பரிமாற்றம் தொடர்பான கடமைகளை நிறைவேற்றியதாக அவர் கூறினார்.
டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து 75 நாட்களில் செய்த வேலைகளை விட ஜனாதிபதி அனுர திஸாநாயக்க 63 நாட்களில் அதிக வேலைகளை செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.