News

முஸ்லிம்களின் நோன்பு மாதகால  தேவைக்கான 500 மெட்ரிக் தொன் பேரீத்தம் பழத்துக்கான வரிச்சலுகையை அமுல்படுத்திய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தீர்மானம் பாராட்டுக்குரியது ; SJP

நோன்பு மாத காலத்தை கருத்திற்கொண்டு அன்பளிப்பாக அல்லது நன்கொடையாக வழங்கப்படும் பேரீத்தம்பழங்களுக்கு இறக்குமதி வரியாக ஒரு கிலோகிராமிற்கு விதிக்கப்பட்டிருந்த ரூ. 200 வரியை ஒரு ரூபாவாக அரசாங்கம் இன்று முதல் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜனவரி மாதம் 22 ஆம் திகதி நடைபெற்ற எமது ஊடக மாநாட்டில் நாம், ஏற்கனவே சவூதி அரசினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட 50 மெட்ரிக் தொன் பேரீத்தம் பழங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 20 மில்லியன் மேலதிக வரியினை, முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கு மீளச்செலுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தோம். அதே போன்று இவை வியாபார நோக்கில் கொண்டுவரப்படும் பொருட்கள் அல்லாமல் நோன்பு மாத காலத்தை கருத்திற்கொண்டு அன்பளிப்பாக வழங்கப்படுபவை என்பதையும் சுட்டிக்காட்டி இருந்தோம்.

மொத்தமாக 500 மெட்ரிக் தொன் பேரீத்தம் பழங்கள் முஸ்லிம்களின் நோன்பு மாத காலத்திற்கு தேவைப்படும் நிலையில், இந்த வரிச்சலுகையை அமுல்படுத்திய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தீர்மானம் பாராட்டுக்குரியது.

அத்தோடு இவற்றை முஸ்லிம் சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தினூடாக ‘வினைத்திறனான வகையில்’ உரிய மக்களுக்கு சென்றடையும் ஒரு பொறிமுறையை அமுல்படுத்துமாறும் கோரிக்கை விடுக்கிறோம்.

– சமூக நீதிக் கட்சி.
28.01.2025.

#socialjusticeparty

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button