News

இந்த ஆண்டு 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கிறேன் ; ஜனாதிபதி

பொருளாதார பரிமாற்ற சட்டமூலத்தை திருத்தங்களுடன் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று (28) பிற்பகல் கொழும்பில் நடைபெற்ற “இலங்கை பொருளாதார உச்சி மாநாடு 2024” இல் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

சமூகங்களை ஒருங்கிணைத்து கிராமப்புற மக்களுக்கான புதிய பொருளாதார அலகுகளை உருவாக்குவது குறித்து இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிராமிய மக்களுக்கு புதிய பொருளாதார ஆதாரங்களை உருவாக்குவதே அரசாங்கத்தின் பிரதான இலக்கு எனவும், அதற்காக சர்வதேச நிதியத்தின் அளவுகோல்களின் அடிப்படையிலும் கணிசமான தொகையை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் ஜனாதிபதி அங்கு குறிப்பிட்டார்.

மேலும், இந்த ஆண்டு 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தருவார்கள் என்று தான் எதிர்ப்பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button