பறகஹதெனிய தேசிய பாடசாலையின் Batch 2006 (O/L) பழைய மாணவ மாணவிகளின் பூரண அனுசரணையுடன் சுமார் 5 லட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட கொடிக் கம்ப மேடை திறப்பு வைபவம்

பறகஹதெனிய தேசிய பாடசாலையின் Batch 2006 (O/L) பழைய மாணவ மாணவிகளின் பூரண அனுசரணையுடன் சுமார் 5 லட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட கொடிக் கம்ப மேடை திறப்பு வைபவம் நேற்று (31/01/2025 ) காலை 8:30 மணிக்கு பாடசாலையில் இடம்பெற்றது . அதிபர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் Batch 2006 பழைய மாணவ மாணவிகள், பாடசாலை ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்தி சங்க நிறைவேற்றுக் குழு, மற்றும் பழைய மாணவர் சங்க நிர்வாகக் குழு உறுப்பினர்கள்
ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய அதிபர் Batch 2006 பழைய மாணவர்களுக்கு தன் நன்றிகளைத் தெரிவித்ததுடன் இது ஏனைய பழைய மாணவர் வகுப்புக்களுக்கும் ஒரு முன்மாதிரியாகும் என்று தெரிவித்தார்.
பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் தனது உரையின் போது ” பழைய மாணவர் சங்கம் என்பது ஆண் மாணவர்களுக்கு மட்டுமன்றி பழைய மாணவிகளுக்குமான சங்கம் தான் ” என்பதை வலியுறுத்தியதுடன், ஏனைய பழைய மாணவர் வகுப்புக்களும் இவ்வாறான பங்களிப்புகளை மேற்கொள்ள பழைய மாணவர் சங்கத்துடன் கைகோர்க்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
Batch 2006 மாணவர்கள் அனைவரையும் பழைய மாணவர் சங்கத்தின் அங்கத்துவங்களைப் பெற்று பழைய மாணவர் சங்கத்தில் இணைந்து கொள்ளுமாறான ஒரு அழைப்பாக நிகழ்வைத் தொடர்ந்து பிற்பகல் இடம்பெறவிருந்த Batch 2006 மாணவர்களின் மீள் சங்கம நிகழ்வின் போது பகிர்ந்தளிப்பதற்காக பழைய மாணவர் சங்கத்தின் அங்கத்துவத்துக்கான விண்ணப்பப் படிவங்கள் Batch 2006 இன் பழைய மாணவர் சகோதரர் Anfas Piraws இடம் கையளிக்கப்பட்டன.







