News

கட்டணம் செலுத்த பணமில்லாமல் எண்ணெய் கப்பல்கள் வரிசையாக இருந்த நாட்டை நாம் பெறுப்பேற்றோம்.

தேசிய மக்கள் சக்தி அதிகாரத்தை கைப்பற்றிய போது இலங்கை வங்குரோத்து நிலையை உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்தியிருந்தாகைஇ கைத்தொழில் அமைச்சர் திரு.சுனில் ஹந்துன்நெத்தி கூறுகிறார்.

சர்வதேச ரீதியில் கடன் வாங்க முடியாத நாடு, கடன் கடிதம் திறக்க முடியாத நிலை இருந்தது என்றார்.

கடனுக்கான கடிதத்தை திறக்க முடியாமல் துறைமுகத்தில் எண்ணெய் கப்பல்கள் வரிசை கட்டி நிற்கும் நிலை இருந்ததாகவும் மக்கள் சாலையில் வரிசையில் நிற்கும் போது, கடலில் கப்பல்கள் வரிசையாக நின்றதாக அவர் கூறினார்.

இவ்வளவு பெரிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டைக் பொறுப்பேற்அ போதும் தமது அணியில் கேபினட் அமைச்சர் பதவிகளில் அனுபவம் பெற்ற 6 பேர் மட்டுமே இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தெரண சேனலின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Recent Articles

Back to top button