தனி தீவொன்றை வாங்கி இஸ்லாமிய அரசை உருவாக்க மதகுரு ஒருவர் முயற்சி ..
ஷேக் யாசர் அல்-ஹபீப் என்ற 45 வயதான முஸ்லிம் மதகுரு, ஸ்காட்லாந்தின் மேற்கு கடற்கரையில் உள்ள டோர்சா தீவை வாங்குவதற்கான மேம்பட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக. தி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.
ஷரியா சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக குறித்த தீவில் பாடசாலைகள், மருத்துவமனைகள் மற்றும் மசூதிகளை தனது அமைப்பு உருவாக்க்கி அந்த தீவை தனது சொந்த ‘இஸ்லாமிய அரசாக’ மாற்றியமைக்க் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவரைப் பின்பற்றுபவர்கள் அவரை இமாம் மஹ்தி என நம்புவதாக கூறப்படுகிறது.
ஒரு மைல் நீளமுள்ள இந்த தீவு 85 ஆண்டுகளாக மக்கள் வசிக்காமல் ஸ்லேட் தீவுகளில் அமைந்துள்ளது. கடந்த ஆண்டு, இந்த தீவை விறபனை செத்த £1.5 மில்லியனுக்கு விளம்பரம் செய்யட்டது.. அண்டை தீவான லூயிங்கிலிருந்து ஒரு தனியார் படகைப் பயன்படுத்தி கடல் வழியாக மட்டுமே அணுக முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.