News

தேர்தல் காலத்தில் மனதுக்கு தோன்றுவதை இலகுவில் பேசிவிடலாம் ஆனால் அவற்றை செயற்படுத்த முடியாது என்பதை அரசாங்கம் தற்போதாவது விளங்கிக் கொள்வது நல்லது என நாமல் அறிவுரை கூறினார்

முன்னாள் ஜனாதிபதி கிராமத்துக்கு கிராமம் சென்றதை போன்று தற்போதைய ஜனாதிபதியும் செல்கிறார். அதுவும் நல்லதே இருப்பினும் மக்கள் மத்தியில் செல்லும் போது அடிப்படை பிரச்சினைகளுக்கான தீர்வுடன் செல்ல வேண்டும் எனபொதுஜன பெரமுனவின் எம்.பி. யான நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

காலம் கடந்தாவது நெல்லுக்கான உத்தரவாத விலையை அரசாங்கம் 120 ரூபாவாக நிர்ணயித்துள்ளமை வரவேற்கத்தக்கது.

ஆனால் உத்தரவாத விலையை நிர்ணயிப்பதற்கு முன்னரே ஒருசில பகுதிகளில் விவசாயிகள் வேறு வழியில்லாத காரணத்தால் நெல்லை பிரதான அரிசி உற்பத்தியாளர்களுக்கு விற்பனை செய்து விட்டனர் நாட்டில் தற்போதைய பிரதான பேசுபொருளாக வாகன இறக்குமதி யுள்ளது . தேசிய மக்கள் சக்தி கடந்த காலங்களில் 12 இலட்சத்துக்கு மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும் என்று குறிப்பிட்டது.

ஆனால் இன்று அவ்வாறில்லை. ஆகவே தேர்தல் காலத்தில் மனதுக்கு தோன்றுவதை இலகுவில் குறிப்பிடலாம், ஆனால் அவற்றை செயற்படுத்த முடியாது என்பதை இவர்கள் தற்போதாவது விளங்கிக் கொள்வது நல்லது.

தேங்காய் தட்டுப்பாடு தொடர்பில் பிரதமரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அவரும் அதற்கு பதிலளித்தார். ஆனால் குரங்கு தொல்லை, தேங்காய் சம்பல் மற்றும் தேங்காய் பால் பற்றி அவர் குறிப்பிடப்படவில்லை.

குரங்குகள் தேங்காயை அழிப்பதால் தேங்காய்க்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் ஆரம்பத்தில் குறிப்பிட்டது. பின்னர் தேங்காய் சம்பல் மற்றும் தேங்காய் பால் பயன்பாட்டுக்கு தேங்காய் அதிகளவில் பயன்படுத்தப்படுவதால் தான் தேங்காய்க்கான தட்டுப்பாடு ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டது. அடிப்படை பிரச்சினைகளுக்கு சாத்தியமற்ற விடயங்களையே அரசாங்கம் கூறி வருகின்றது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button