News

அமெரிக்காவில் மற்றும் ஒரு விமான சோகம் – 10 பேருடன் பறந்த பெரிங் ஏர் விமானம் ரேடாருடனான தொடர்பை இழந்து மாயமானது

அமெரிக்காவுக்கு சொந்தமான அலாஸ்காவின்- நோம் என்ற பிரதேசத்தின் அருகே 10 பேருடன் பறந்த பெரிங் ஏர் விமானம் ( Bering Air is an American airline, Alaska, United States) ரேடாருடனான தொடர்பை இழந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

காணாமல் போன விமானம் பெரிங் ஏர் நிறுவனத்தால் இயக்கப்படும் வணிக விமானம் என்பதை அலாஸ்கா மாநில தகவல்கள் உறுதிப்படுத்தின.

“பிப்ரவரி 6, 2025 அன்று, மாலை 4:00 மணிக்கு (அவர்களின் நாட்டு நேரப்படி) காணாமல்போன விமானம் குறித்து AST-க்கு AKRCC-யால் எச்சரிக்கை செய்யப்பட்டது.

உனலாஸ்காவிலிருந்து- நோம் நகருக்குச் சென்று கொண்டிருந்த பெரிங் ஏர் கேரவன் விமானம் 9 பயணிகள் மற்றும் 1 விமானியுடன் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டது.

கடைசியாகக் கண்டறியப்பட்ட தகவல்களை வைத்து தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்கள் பணியாற்றி வருகின்றன.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button