பெப்ரவரி 16 இல் வெளியாகிறது ‘கழுதை மனிதன்’

இலங்கை நெய்னார் சமூக நல காப்பக ஏற்பாட்டில் சிரேஷ்ட ஒலி, ஒளிபரப்பாளரும் எழுத்தாளருமான அஷ்ரஃப் சிஹாப்தீன் மொழி பெயர்த்த ‘கழுதை மனிதன்’ சிறுகதைத் தொகுதி வெளியீடும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்குதல் நிகழ்வும்.
————————————————
சிரேஷ்ட ஒலி, ஒளிபரப்பாளரும் எழுத்தாளருமான அஷ்ரஃப் சிஹாப்தீன் மொழி பெயர்த்த ‘கழுதை மனிதன்’ சிறுகதைத் தொகுதி வெளியீடும் இலங்கை நெய்னார சமூக நலக் காப்பகத்தின மாணாக்கருக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் எதிர்வரும் 16.02.2025 ஞாயிற்றுக் கிழமை பி.ப. 4.00 மணிக்கு தெமடகொட வை.எம்.எம்.ஏ. மண்டபத்தில் நடைபெறவுள்ளன.
பிரபல எழுத்தாளர் கவிஞர் அல் அஸூமத் அவர்களின் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் பிரபல சிரேஷ்ட சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் அவர்கள் பிரதம அதிதியாகவும் மையோண் நிறுவனப் பணிப்பாளர் றிஸ்லி முஸ்தபா அவர்கள் சிறப்பதிதியாகவும் கலந்து கொள்வார்கள். நூலின் முதற் பிரதியை யுனிவர்ஸல் ட்ரவல் கன்ஸல்டன்ஸி -அஜ்மா நிறுவனக் குழுமப் பணிப்பாளர் அக்கீல் ஜூனைட் அவர்கள் பெற்றுக் கொள்வார். இவர்களுடன் கௌரவ அதிதிகளாகவும் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
நூல் நயவுரைகளை எழுத்தாளர்களும் மொழிபெயர்ப்பாளர்களுமான ஜிப்ரி ஹஸன் அவர்களும் ஹேமச்சந்திர பத்திரண அவர்களும் நிகழ்த்தவுள்ளனர். அத்துடன் வாசகனின் வாசகங்கள் என்ற தலைப்பில் பேருவளைப் பிராந்திய எழுத்தாளர் ஒன்றியத் தலைவர் ரபீஸ் ஹம்ஸா அவர்களும் மொழிபெயர்ப்பும் மறுபடைப்பே என்ற தலைப்பில் கவிஞரும் பேச்சாளருமான தமிழ்த் தென்றல் எஸ்.எம். அலி அக்பர் அவர்களும் உரையாற்றவுள்ளனர்.
மாணாக்கருக்கான பாடசாலை உபகரணங்களை வழங்கும் ஏற்பாட்டினையும் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளையும் இலங்கை நெய்னார் சமூக நலக் காப்பகத் தலைவர் இம்ரான் நெய்னார் மேற்கொண்டு வருகிறார். நிகழ்ச்சிகளை ஆதவன் வானொலி அறிவிப்பாளர் முஸ்னி முர்ஷித் தொகுத்து வழங்குவார்.
- முனீரா அபூபக்கர் –








