நாடளாவிய ரீதியில் மின்தடை ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது பல இடங்களில் மின் விநியோகம் வழமைக்கு திரும்பி உள்ளதாக மின்சார சபை தெரிவித்தது..

நாடளாவிய ரீதியில் இன்று (09) காலை ஏற்பட்ட திடீர் மின்வெட்டு தற்போது பல இடங்களில் வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு தேசிய வைத்தியசாலை, அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையம், பயகம மற்றும் சபுகஸ்கந்த உள்ளிட்ட பல முக்கிய பிரதேசங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு மின் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பின் பிரதான அமைப்பிற்குச் சொந்தமான “பாணந்துறை கிரிட் துணை மின்நிலையத்தில்” ஏற்பட்ட அவசர நிலை காரணமாக நாடளாவிய ரீதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
அங்கு எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயக்கொடி, பாணந்துறை கிரிட் துணை மின்நிலையத்தில் குரங்கு மோதியதால் மின் தடை ஏற்பட்டதாகக் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், அமைச்சரின் அறிக்கையை உறுதிப்படுத்தாமல் “பாணந்துறை துணை மின்நிலையத்தில் அவசரநிலை” என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு பின்னர் நிலைமையை விவரித்தது.
சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மின்சாரத்தை விரைவில் சீரமைக்கும் பணியில் குழுக்கள் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது

