News
இந்த ஆண்டு ஆரம்பித்து 38 நாட்களில் மட்டும் வீதி விபத்துக்களால் 203 பேர் உயிரிழப்பு.

இந்த ஆண்டு ஆரம்பித்து 38 நாட்களில் கவனக்குறைவாக வாகனம் செலுத்தியதால் ஏற்பட்ட வீதி விபத்துகளில் 203 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அதன்படி, ஜனவரி 1 ஆம் திகதி முதல் பெப்ரவரி 7 ஆம் திகதிவரை நடந்த வீதி விபத்துகளில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்தார்

