News

தான் தாக்கப்பட்டதாக கூறி அர்ச்சுனாவும் வைத்தியசாலையில் அனுமதி !

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தாக்கியதாக கூறி, இருவர் யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எமது செய்திப்பிரிவு மேற்கொண்ட விசாரணையில், பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவும் தாக்கப்பட்டதாகக் கூறி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் நேற்று (11) குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், இரு தரப்பினரிடமிருந்தும் பெறப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

Recent Articles

Back to top button