News
முஸ்லிம் இளைஞர்கள் பாவம் அவர்களை நாம் பாதுகாக்கவேண்டும்..

முஸ்லிம் இளைஞர்கள் பாவம் எனவும் அவர்களை நாம் இஸ்லாமிய அடிப்படைவாதத்தில் இருந்து பாதுகாக்க வேண்டுமென பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டார்.
சமூக ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் கருத்து வெளியிட்ட அவர் சஹ்ரான் குழு இல்லாவிட்டாலும் அவர்களது சித்தாந்தம் தற்போதும் உள்ளது.அந்த சித்தாந்தத்தை ஊக்குவிக்கும் பல புத்தககங்கள் தற்போதும் உள்ளன.
இந்தியாவின் ரோ , இஸ்ரேல் மொஷாத் , அமெரிக்க சி ஐ ஏ போன்ற அமைப்புகள் அவர்களது தேவைக்காக இவர்களை பாவிக்கலாம் முஸ்லிம் இளைஞர்கள் பாவம் அவர்களை நாம் பாதுகாக்கவேண்டும் என குறிப்பிட்டார்.
நாட்டில் இஸ்லாமிய அடிப்படைவாத அச்சுறுத்தல் இன்றும் நீங்கவில்லை எனவும் அது நாட்டிற்க்கு அச்சுறுத்தல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

