10 இலட்சம் மரங்களை நட முயற்சிக்கும் மாணவி மின்மினி மின்ஹா

10 இலட்சம் மரங்களை நட முயற்சிக்கும் 12 வயது மாணவி மின்மினி மின்ஹா
அம்மாணவிக்கு “Brilliant Child Award ” என்ற விருது வழங்கி வைக்கப்பட்டது
பாறுக் ஷிஹான்
பசுமை மீட்சி பயணம் என்ற நோக்குடன் தேசிய ரீதியில் 10 இலட்சம் மரங்களை நடுவதற்கு உரிய அதிகாரிகளின் அனுமதி பெற்று செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் பாடசாலை மாணவி மின்மினி மின்ஹாவின் செயற்பாடுகளை கௌரவித்து இன்று (29) கல்முனை அல்-பஹ்ரியா மகா வித்தியாலயத்துடன் இணைந்து கல்முனை பிர்லியன்ட் விளையாட்டுக் கழகம் நடாத்திய நிகழ்வில் அம்மாணவிக்கு “Brilliant Child Award ” என்ற விருது வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வில் பாடசாலை அதிபர் எம்.ஏ.சலாம், மற்றும் பிரதி அதிபர் இ.றினோசா, உதவி அதிபர்களான எம்.ஆர்.எம் முஸாதிக் , எம்.எச்.ஐ.இஸ்னத், யு.எல்.ஹிதாயா ,எம்.எப்.நஸ்மியா ,ஆகியோரின் பங்கேற்புடன் கல்முனை பிர்லியன் விளையாட்டு கழக தலைவர் எம்.எஸ்.எம்.பழில் மற்றும் கழகத்தின் தவிசாளரும் ஆரம்ப பிரிவு பொறுப்பாசிரியருமான ஏ.சி.நழீம் ஆகியோருடன் சக ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்.
சம்மாந்துறை அல் -அர்சத் ம.வித் தரம் 7 ல் கல்வி கற்று வரும் 12 வயது மாணவிதான் மின்மினி மின்ஹா.இவர் தனது 10 வயதிலிருந்து மாவட்டமட்ட, தேசிய மட்ட, சர்வதேச மட்டங்களில் 25 க்கும் மேற்பட்ட விருதுகளினையும், கௌரவ பட்டங்களையும் பெற்றுக் கொண்ட சிறுமியாவார்.10 இலட்சம் நபர்களினை இலக்காய் கொண்டு “சுற்றுச் சூழல் தொடர்பிலான விழிப்புணர்வு உரையினை நிகழ்த்தி வரும் ஆசிய நாடுகளில் மிக வயது குறைந்த சிறுமி” என்ற சாதனையாளர் விருதுக்காக பரித்துரை செய்யப்பட்டுள்ளார் அந்த மின்மினி மின்ஹா.தான் சுயற்சையான முறையில் கல்வி, நிருவாக உயரதிகாரிகளின் அனுமதியுடன் சுற்று சூழல் தேசிய வேலைத் திட்டத்தின் ஓரங்கமாக இன்று எமது முன்னிலையில் விழிப்புணர்வு உரையினை மேற்கொண்டுள்ளார் என பாடசாலை அதிபர் குறிப்பிட்டார்.
மேலும் மின்மினி மின்ஹாவின் சிறப்புரை மற்றும் இறுதியாக மரநடுகையுடன் நிகழ்வு பாடசாலை விளையாட்டுப் பிரிவிற்காக விளையாட்டு உபகரணங்கள் அன்பளிப்பு இதர செயற்பாட்டில் திறமைகளை வெளிக்காட்டிய மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்குதல் என சிறப்பாக நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
—
Thanks & Best Regards,
பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)
Journalist-මාධ්යවේදී
FAROOK SIHAN(SSHASSAN)
B. F .A (Hons)Diploma-in-journalism(University of Jaffna )
0779008012-(URGENT)
sihanfarook@yahoo.com, sihanfarook@gmail.com,sihanfarook@hotmail.com
0719219055,0712320725,0754548445

