News

அசோக ரன்வல தனது கல்விச் சான்றிதழைக் கொண்டுவருவதாக கூறிசென்று இன்றுடன் 2 மாதங்கள்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் பாராளுமன்றத்தின் முதலாவது சபாநாயகராக நியமிக்கப்பட்ட திரு.அசோக ரன்வல அந்த பதவியை இராஜினாமா செய்து இரண்டு மாதங்கள் ஆகின்றன.

டாக்டர் பட்டம் பெற்றதாகக் கூறப்படும் சர்ச்சையே அவரது ராஜினாமாவுக்குக் காரணம்.

எதிர்வரும் காலங்களில் தனது பட்டதாரி சான்றிதழை பாராளுமன்றத்தில் சமர்பிப்பதாக தெரிவித்து டிசம்பர் 13ஆம் திகதி பதவி விலகினார்.

ஆனால், இரண்டு மாதங்கள் கடந்தும், இதுவரை பட்டப்படிப்பு சான்றிதழ் வழங்கப்படவில்லை.

ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டமும், மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டமும் பெற்றதாகவும் ஆனால் இதுவரை சான்றிதழ் எதனையும் சமர்ப்பிக்கவில்லை.

Recent Articles

Back to top button