News

வயது வந்த பெண்களுக்கிடையிலான ஒரே பாலின உறவுகளை குற்றமற்றதாக மாற்றுவதற்கு தேவையான சட்ட சீர்திருத்தங்களை மேற்கொள்ளுமாறு கோரிக்கை !!

LGBTIQ சமூகத்தின் நலனை மேம்படுத்துவதற்காக NPP கொள்கைகளில் கூறப்பட்டுள்ளபடி,இலங்கையில் உள்ள சம்மதமுள்ள வயது வந்த பெண்களுக்கிடையிலான ஒரே பாலின உறவுகளை குற்றமற்றதாக மாற்றுவதற்கு தேவையான சட்ட சீர்திருத்தங்களை மேற்கொள்ளுமாறு புதிய அரசாங்கத்தை LGBTIQ உரிமைகளுக்காக பரப்புரை செய்யும் சமூக ஆர்வலர் குழுக்கள்,நேற்று வலியுறுத்தியுள்ளன.

2022 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் (UN OHCHR) பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை நீக்குவதற்கான குழு (CEDAW) ஒப்புக்கொண்ட இலங்கைப் பெண்களுக்கிடையில் ஒரே பாலின உறவுகளை குற்றமாக்குவது CEDAW உடன்படிக்கையை மீறுவதாவும் .இலங்கை அரசு தேவையான சட்ட சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

புதிய அரசாங்கம் கொள்கைகளில் LGBTIQ சமூகத்தின் நலனை மேம்படுத்துவதற்கான அவர்களின் நோக்கத்தை குறிப்பிட்டுள்ள போதிலும், சீர்திருத்தங்கள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Recent Articles

Back to top button