News
அதானி, இலங்கையில் காற்றாலை மின் திட்டங்களை கைவிட்டதன் மூலம் இந்தியா இலங்கையை கைவிட்டுள்ளது ; ரணில்

அதானி இலங்கையில் காற்றாலை மின் திட்டங்களை கைவிட்டதன் மூலம் இந்தியா இலங்கையை கைவிட்டதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு flower வீதியிலுள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் இலங்கை சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய நிறுவனமான அதானி குழுமம் காற்றாலை மின் திட்டத்தை கைவிட்டு நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில், அவர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்க அரசு தயாராகி வருகிறது என இது தொடர்பில் தெரிய வருகிறது.



