பேராதனைப் பல்கலைக்கழகத்தின் (UoP) மனித அபிவிருத்தி பிரிவு, அர்ப்பணிப்புள்ள ஊழியர்களை கௌரவிக்கும் நிகழ்வு

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் (UoP) மனித அபிவிருத்தி பிரிவு (HRDU) தனது முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பணிக்குழு சிறப்பு விருது விழாவை, அர்ப்பணிப்புள்ள ஊழியர்களை கௌரவிக்கும் வகையில் 2025 பெப்ரவரி 18ஆம் திகதி மதியம் 1.00 மணிக்கு பல்கலைக்கழகத்தின் SCS கேட்போர் கூடத்தில் நடத்துகிறது.
இந்த நிகழ்வில் சுமார் 2,000 கல்விசாரா மற்றும் நிர்வாகத் துறை சாரா ஊழியர்களின் பங்களிப்பு அங்கீகரிக்கப்படுவதுடன், பல்கலைக்கழக ஊழியர்களின் திறமைகள் வெளிப்படுத்தப்படும். மனித வளத்திற்கென அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பிரிவைக் கொண்டிருப்பது பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வலிமையாகவும், இலங்கைப் பல்கலைக்கழகங்களிடையே காலத்தின் தேவையான முன்முயற்சியாகவும் உள்ளது.
தனது நோக்கத்தினை நிறைவேற்றும் வகையில், HRDU ஆனது UoP ஊழியர்களின் வளர்ச்சி மற்றும் வேலை ஈடுபாட்டை மேம்படுத்தும் நோக்கில் விரிவான திட்டம் மற்றும் சகல மட்டத்திணையும் உள்ளடக்கிய நிகழ்ச்சித்திட்டத்தை வடிவமைத்துள்ளது.

