முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன மீது ஊழல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவுக்கு (Piyankara Jayaratne) எதிரான குற்றப்பத்திரிகைகள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த அமைச்சர் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராக இருந்த காலத்தில் குற்றம் புரிந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
அதன்படி, சிலாபம் பகுதியில் உள்ள ஒரு வங்கிக் கணக்கிற்கு 494,000 ரூபாவை மாற்றுமாறு அதிகாரசபை அதிகாரிகளைத் தூண்டி “ஊழல்” குற்றத்தைச் செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
நீதிபதி உத்தரவு
இந்த நிலையில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகள் இன்று (18) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திரகரத்ன முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சரை தலா 500,000 ரூபா பெறுமதியுள்ள இரு சரீர பிணையில் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

