News
அஷ்ரஃப் சிஹாப்தீனின் ‘கழுதை மனிதன்’ மொழி பெயர்ப்பு சிறுகதைத் தொகுதி வெளியீடும், புரவலர் இம்ரான் நெய்னாரின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும்.

சிரேஷ்ட ஒலி, ஒளிபரப்பாளரும் எழுத்தாளருமான அஷ்ரஃப் சிஹாப்தீன் மொழி பெயர்த்த ‘கழுதை மனிதன்’ சிறுகதைத் தொகுதி வெளியீடும் இலங்கை நெய்னார் சமூக நலக் காப்பகத்தின மாணாக்கருக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் ஞாயிற்றுக் கிழமை தெமடகொட வை.எம்.எம்.ஏ. மண்டபத்தில் நடைபெற்றது.
பிரபல எழுத்தாளர் கவிஞர் அல் அஸூமத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரபல சிரேஷ்ட சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் பிரதம அதிதியாகவும் கலந்து கொண்டனர் நூலின் முதற் பிரதியை யுனிவர்ஸல் ட்ரவல் கன்ஸல்டன்ஸி -அஜ்மா நிறுவனக் குழுமப் பணிப்பாளர் அக்கீல் ஜூனைட் பெற்றுக் கொள்வதையும்
மாணாக்கருக்கான பாடசாலை உபகரணங்களை இம்ரான் நெய்னார் வழங்குவதையும் கலந்து கொண்டவர்களின் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம் படபிடிப்பு: எஸ் .ராமதாஸ்

































