News
சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணை பிரிவினரால் ஐக்கிய தேசியக் கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அவரது மகனும் கைது

புத்தளம் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகர மற்றும் அவரது மகன் சட்டவிரோதமான முறையில் வாகனம் ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

