News

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் சூடு பிடித்த பாராளுமன்றம்..

இன்று காலை புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கவலை எழுப்பி, நாட்டில் கொலைகள் அதிகரித்து மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறினர்.

நீதிமன்றத்துக்குள்ளும் தனிநபரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அது மிகவும் பாரதூரமான நிலை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

தினசரி கொலைகள் நடைபெறுவதாகக் கூறிய பிரேமதாச, இந்தப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

நாட்டில் சட்டம் ஒழுங்கை உறுதிப்படுத்த அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதில் அரசுக்கு ஆதரவளிக்க எதிர்க்கட்சிகள் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

பாதாள உலக செயற்பாடுகளை அரசாங்கம் பாரதூரமாக எடுத்துக்கொண்டுள்ளதாகவும் பாதாள உலக செயற்பாடுகளுக்கு எதிரான சட்டத்தை அரசாங்கம் அமுல்படுத்தும் எனவும் அரசாங்கத்தின் பிரதம கொறடா அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

ஆயுதங்களை ஒப்படைப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு பொது மன்னிப்பு காலத்தை அறிவித்துள்ளதாகவும், பெரும்பாலான மக்கள் தமது ஆயுதங்களை பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாதாள உலக செயற்பாடுகள் அதிகரித்துள்ளமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், டுபாய் மற்றும் இந்தியாவில் இருந்து பாதாள உலக குற்றவாளிகளை வீழ்த்துவதற்கு அரசாங்கம் தலையிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த சில நாட்களில் சுமார் 78 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், கொலைகள் தற்போது சாதாரண நிகழ்வாகிவிட்டதாகவும் SJB பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பொலிஸ், விசேட அதிரடிப்படை மற்றும் புலனாய்வுப் பிரிவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

Recent Articles

Back to top button