News
ஈரான் போரை விரும்பவில்லை, பேச்சுவார்த்தையையே விரும்புகின்றது. ஆனால் அமெரிக்கா அவர்களது விருப்பத்தை திணிக்கவோ அல்லது ஈரானை சரணடைய வைக்கவோ முயற்சி செய்தால் அது நடக்காது 🇮🇷 ஜனாதிபதி

ஈரான் பேச்சுவார்த்தையை விரும்புகிறது என்றும், போரை விரும்பவில்லை என்றும் ஈரான் ஜனாதிபதி பெஷெஸ்கியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஈரான் அரசு ஊடகத்திற்கு பெஷெஸ்கியன் அளித்துள்ள பேட்டியில், “எங்கள் நாடு போரை விரும்பவில்லை, மாறாக பேச்சுவார்த்தையை விரும்புகின்றது. அமெரிக்கா தனது விருப்பத்தை திணிக்கவோ அல்லது ஈரானை சரணடைய வைக்கவோ மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சியும் தோல்வியடையும்.
சர்வதேச சட்டம் மற்றும் மனிதாபிமான கொள்கை கட்டமைப்புகளின்படி பொதுமக்கள், குழந்தைகளைக் குறிவைப்பதிலும், பாடசாலைகள் மற்றும் மருத்துவமனைகள் உள்ளிட்ட முக்கிய மையங்களை அழிப்பதிலும் என்ன நியாயம் இருக்கின்றது?” என்று பெஷெஷ்கியன் தெரிவித்துள்ளார்



